Karlo Abart
11 min readJul 30, 2020

--

2020 ல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீஸ்

இது வரை, இந்த வருடம் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்று பல க்ரிப்டோ முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். சந்தையில் முன்னோட்டத்துக்காக காத்திருக்கும் போது, 2020ல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீஸ் மேல் இவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். மற்றும் இதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன.

மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டவை பற்றி நான் பதில் அளிக்கும் முன், என்னுடைய பட்டியலை கீழே காணலாம்.

குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்

குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இறுதியாக பெருமளவில் மதிப்பு உயர்வதை கண்டால், குறைவான விலையில் உள்ள க்ரிப்டோகரண்சீயில் முதலீடு செய்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவில் வளர்ச்சி இருக்கும். இதற்கு வால்யூ இன்வெஸ்டிங் என்று பெயர்: சந்தையில் குறைவாக மதிப்பிடப்பட்ட கரண்சீயில் முதலீடு செய்வது, மற்றும் கரண்சீயின் உண்மையான ஆற்றல் வெளிப்படும் போது இலாபங்கள் அறுவடை செய்வது.

ஒரு கரண்சீயில் குறைவான மதிப்பு இருந்தால், முதலீட்டாளர்களுக்கு பேரம் பேசி வாங்குவது போல் இருக்கும். சந்தையின் உண்மையான மதிப்பு உயரும் போது மற்றும் கரண்சீயின் மதிப்பு உயரும் போது இலாபம் கிட்டும். அந்த தருணத்தில், கணிசமான இலாபம் கிடைக்க கரண்சீயை விற்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு உருவாகும். முதலீடு செய்வதில் இது ஒரு மிகவும் அவசியமான இலக்கு ஆகும். குறைவான விலையில் வாங்கு, அதிக விலையில் விற்பனை செய். கேள்வி என்னவென்றால், முதலீடு செய்ய எப்படி குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீஸ் வாங்குவது?

குறைவாக மதிப்பிடப்பட்ட நாணயங்களை கண்டுகொள்ள சந்தை எப்படி இயங்குகிறது என்று அறிந்து கொள்ள சில ஆற்றல்கள் மற்றும் திறமைகள் தேவைப்படும்.

இது பரவலாகப்பட்டது. இவை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் மதிப்பு என்ன அல்லது எப்படி பரிமாறம் செய்யப்படுகிறது என்பது பற்றி எந்த அரசு மற்றும் வங்கிக்கு அதன் மேல் கட்டுப்பாடு இல்லை. இதனால், மக்கள் என்ன விலை கொடுக்க அல்லது பரிமாற்றம் செய்ய விரும்புகிறார்களோ, அது தான் க்ரிப்டோகரண்சீயின் மதிப்பு.

எனவே, வினியோகம் மற்றும் தேவை க்ரிப்டோகரண்சீயின் மிகவும் முக்கியமான தீர்மானிக்கும் காரணமாக இருக்கும். இது தான் அடிப்படை பொருளாதார கொள்கை. ஒரு க்ரிப்டோகரண்சீயில் அதிக டோக்கன் வினியோகம் இருந்து வணிகர்கள் மற்றும் பயன்பாட்டாளர்களிடமிருந்து குறைவான தேவை இருந்தால், க்ரிப்டோகரண்சீயின் மதிப்பு விழும் மற்றும் நேர்மாறாகவும்.

க்ரிப்டோவில் இருப்புநிலை அறிக்கைகள் இல்லை. புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் நிறைய விளம்பரம் மூலம் வாக்குறுதியை பொருத்து விலை திர்மானிக்கப்படுகிறது. ஆகையால், மோசடிகள் மற்றும் தோல்வியடைந்த காயின்ஸ் நிறைய இருக்கும் போது, மைக்ரோ கேப் காயின்ஸின் உலகில் பயணம் செய்ய கடினமாக இருக்கலாம்.

சில நேரங்களில் குறைவான மதிப்புடன் தோன்றினாலும் இந்த நாணயங்களின் மதிப்பு குறைவாக இருக்காது, எனவே அதை அறிந்து கொள்ள விவேகமுள்ள கண்கள் தேவைப்படும்.

ஆனால் கவலை வேண்டாம் ! இந்தக் கட்டுறையை படித்துக் கொண்டே இருங்கள் மற்றும் 2020ல் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரன்சீஸ் மீது கண் வைப்பத்து பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

1. ஃப்யூஷன் (FSN)

ஃப்யூஷன் ஒரு பொதுவான ப்ளாக்செயின் மற்றும் இதன் இலக்கு — க்ராஸ் செயின், க்ராஸ் ஆர்கனைசேஷன் மற்றும் க்ராஸ் டேட்டாசோர்ஸ் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் வழங்கி ஒரு உள்ளடக்கிய க்ரிப்டோ-நிதி மேடை உருவாக்குவது. இந்த திட்டத்தில் ஹையியார்க்கியல் ஹைப்ரிட் கன்சென்சஸ் மெகானிஸம் (HHCM) பயன்படுத்தப்படுகிறது. ஒரு திறமையான மற்றும் பாதுகாப்பான மேடை அமைக்க PoW, PoS யின் தனிமங்களின் கலவை இதில் அடங்கியுள்ளது.

$16 மில்லியன் மூலதனத்துடன் அதன் நாணயம் மூலம் ஃப்யூஷன், க்ரிப்டோ உலகில் 190வது இடத்தில் உள்ளது.

டெஜுன் கியான், ஃப்யூஷன் நிறுவனர்

ஏன் ஃப்யூஷன் ஒரு மிகவும் குறைவான மத்திப்புள்ள க்ரிப்டோகரண்சீயாக தோன்றுகிறது?

FSN ல் சில புதிரான தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த நாணயத்தினால் க்ராஸ்-செயின் சொத்து இடமாற்றம் செய்ய முடிகிறது மற்றும் காப்பீடு, கடன்கள் மற்றும் டெரிவேடிவ்ஸ் டோக்கனைஸ் செய்ய முடிகிறது.

சந்தேகமின்றி, எதிர்காலத்தில் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகள் ஆகும். ஆனால், தற்போது மற்ற போட்டியிடும் டோக்கன்களுடன் ஒப்பிடுகையில் இதன் மார்க்கெடிங் பொருந்தாது. அதாவது, வெகு சிலருக்கே இதைப் பற்றி தெரியும், எனவே இதன் மதிப்பு குறைவாக உள்ளது.

முக்கியமாக, ஃப்யூஷன் ப்ளாக்செயினில் க்ரிப்டோ சொத்துக்களை பாதுகாக்க ‘டிஸ்ட்ரிப்யுடெட் கன்ட்ரோல் ரைட் மேனேஜ்மென்ட்’ என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கை ஃப்யூஷன் நம்பி உள்ளது. ஒரு ப்ரைவேட் கீயின் டிஸ்ட்ரிபுடெட் ஸ்டோரேஜ் உறுதிப்படுத்துதல் என்பது எந்த ஒரு தனிப்பட்ட முனையும் இதன் சொத்துக்களை அனுக முடியாது; எனவே மற்ற க்ரிப்டோஸை விட இது பாதுகாப்பானது.

மோட்ஸும் ஃப்யூஷன் பயன்படுத்துகிறது. சிக்கலான ஸ்மார்ட் நிதி ஒப்பந்தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இது உருவாக்கப்பட்டது.

தற்போது, FSN ன் விலை $0.50 ஆனால் அதன் உண்மையான விலை சுமார் $10 மற்றும் வெகு விரைவில் இந்த விலையை தொடும். குறைவாக மதிப்பிடப்பட்ட இந்த க்ரிப்டோகரண்சீயை வாங்கினால் 2020 ல் மிகப் பெரிய இலாபங்கள் கிடைக்கும்.

FSN ன் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க, WeDeFi மற்றும் Anyswap போன்ற பல்வேறு செயலிகளை களை ஃப்யூஷன் குழு உருவாக்கி வருகிறது.

WeDeFi ஒரு மொபைல் செயலி மற்றும் எல்லோருக்கும் ஒரு பரவலாக்கப்பட்ட நிதியை அளிக்கிறது. தங்கள் வைத்திருத்தலை கைவிடாமல் இந்த க்ரிப்டோ சொத்தில் பயன்பாட்டாளர்கள் வட்டியை சம்பாதிக்கலாம்.

Uniswap போல் Anyswap ஒரு நீர்மை நிறைவான பூல், ஆனால் அதைவிட சிறந்தது. க்ராஸ்-செயின் பரிமாற்றம் வசதி இதில் உள்ளது.

Huobi, Bittrex, OKEx, மற்ற இதர பங்கு சந்தைகளில் ஃப்யூஷன் பட்டியலிடப்பட்டுள்ளது.

2. செயின்லிங் (LINK)

செயின்லிங் ஒரு டேட்டா பாலம் உதவி கருவி மற்றும் LINK, ஐ கண்டுபிடித்த செயலி, மற்றும் உண்மையான உலகம் மற்றும் வெளிவட்டார இயக்கத்தில் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் செய்ய ஒரு பிரபலமான பரவலாக்கப்பட்ட உபாயம். $1523 மில்லியன் மூலதனத்துடன் உலகில் க்ரிப்டோகரண்சீஸ் பொருத்தவரை LINK 14வது இடத்தில் உள்ளது. எளிமையான வார்த்தைகளில், இது ஒரு பரவலாக்கப்பட்ட ஒராக்கிள் (ஒracle) சேவை மற்றும் செயின்லிங்கின் நெட்வர்க்கை நாட கோரிக்கை வைத்து சங்கிலிக்கு வெளியில் இருக்கும் டேட்டாவை நாட ப்ளாக்செயினை இயலச்செய்கிறது.

முழு ஆஃப்-செயின் டேட்டா நாடும் முறை திறமையானது மற்றும் எளிமையானது, ஏன் என்றால் தன் சொந்த சிலோட் (siloed) நெட்வர்க்கிலிருந்து ஒரு பயன்பாட்டாளர் ஆஃப்-செயின் டேட்டா கோரிக்கை வைத்தல், செயின்லிங் பொருத்தம் பார்த்து வைக்கும் மற்றும் பரவலாக்கப்பட்ட முறையில் மிகவும் பொருத்தமான ஒராக்கிள்ஸை தேர்ந்தெடுக்கும்.

பாரம்பரியமான ஒராக்கிள்ஸிலிருந்து செயின்லிங் மாறுபட்டது; ஏன் என்றால் பரவலாக்கப்பட்ட ஒரக்கிள்ஸ் மூலம் ஆஃப்-செயின் டேட்டவை நாடி பயன்பாட்டாளர்களுக்கு ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் வழங்குகிறது; மற்றும் லிங் ப்ளாக்செயினில் பரவலாக்கப்பட்ட ஒராக்கிள்ஸ் நெட்வர்க்கில் உணர்திறன் தகவல் அனுப்பும் போது அங்கீகரிக்க செய்கிறது; இதனால் நம்பிக்கை அதிகரிக்கிறது.

எதனால் செயின்லிங் ஒரு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள க்ரிப்டோகரண்சீயாக பார்க்கப்படுகிறது

எதனால் செயின்லிங் ஒரு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள க்ரிப்டோகரண்சீயாக பார்க்கப்படுகிறது?

ப்ளாக்செயின் தொழில்நுட்பம் எல்லைகளை தாண்டி பய்ந்து கொண்டிருக்கிறது, மற்றும் க்ரிப்டோகரண்சீயில் மதிப்புள்ள முதலீடு செய்ய ஒவ்வொறு நபரும் கண் காணித்து வருகிறார். எனவே, செயின்லிங் போன்ற சேவைகள் மிகவும் தேவையானது.

துறையில் சீக்கிரமாகவே நுழைந்துள்ளதால் செயின்லிங்கிற்கு பயன் கிடைத்துள்ளது மற்றும் ப்ளாக்செயின் துறைக்கு வெளியே நிறைய ஆதரவு மற்றும் கூட்டணிகள் கிடைத்துள்ளது.

மந்தைமனநிலை முழு வீச்சுடன் செயல்படுகிறது ஏன் என்றால், பல பிரபலமான தொழிலதிபர்கள் செயின்லிங்க்கு ஆதரவு தெரிவிக்க முந்வருகிறார்கள்.

வலிமையான சந்தை தடம் மற்றும் அனுபவமுள்ள மார்கெட்டிங் குழுவுடன் மேலும் செயின்லிங்க்கு தனிப்பட்ட மற்றும் போட்டித்திறன் கூர்மை உள்ளது.

தற்போது, லிங்கின் விலை $4.45 மற்றும் ஓரு ஆண்டுக்கு முன் அதன் மதிப்பு 60 சென்ட்ஸ். பரபலமான சந்தைகளில் இந்த க்ரிப்டோகரண்சீயின் மதிப்பு அதிகரித்து வருகிறது மற்றும் மேலும் வளர்ச்சி நிறைய இடம் உள்ளது.

ஆறிய https://coinmarketcap.com/currencies/chainlink/ விஜயம் செய்யவும்

3. ஆர்க் (ARK)

அடுத்த கட்ட ப்ளாக்செயினை உருவாக்கும் ஆர்க் ஒரு பரவலாக்கப்பட்ட நிறுவனம். இதன் முக்கிய இலக்கு — பல்வேறு ப்ளாக்செயின்கள் தங்களுக்கு இடையே தொடர்பு கொள்வதை சாத்தியம் ஆக்குவது. இந்த தொழில்நுட்பத்துக்கு பெயர் “ஸ்மார்ட்ப்ரிட்ஜ்”. மேலும், தற்போது, இதன் கவனம் — ஒவ்வொறு பரிவர்த்தனைக்கும் ஆர்க் ப்ளாக்செயினில் 64 பைட்ஸ் அடங்கிய தனிப்பயன் இடமுள்ள ‘வெண்டர் ஃபீல்டு” உருவாக்குவது.

$29 மில்லியன் மூலதனத்துடன் இந்த நாணயம், ஆர்க் உலக அளவில் 147வது இடத்தில் உள்ளது.

நான் ஏன் ஆர்க் க்ரிப்டோகரண்சீயில் முதலீடு செய்ய வேண்டும்?

ஆர்க்கின் இறுதி இலக்கு, எந்த நிறுவனத்துக்கு விருப்பமோ அந்த நிறுவனத்துக்கு பொருந்தும் வகையில் ப்ளாக்செயின் தயாராக வழங்குவது. இதன் பரிமாற்றம் இயங்குத்தன்மை அம்சம் ஒரு போனஸ்.

ஒவ்வொறு க்ரிப்டோகரண்சீக்கு ப்ளாக்செயினுடன் இணைப்பத்து ஆர்க் க்ரிப்டோகரண்சீயின் இலக்கு. ஆர்க்கின் இணையதளம் கூறுகையில்:

எங்கள் இலக்கு — எல்லா லிங்க்டு செயின்களுக்கும் ஒரு முழு ஈக்கோசிஸ்டம் உருவாக்குவது, மற்றும் ஆர்க்கை மிகவும் வளைக்கத்தக்க, இணங்கத்தக்க மற்றும் மேம்படுத்தக்கூடிய ஒரு முடிவற்ற மெய்நிகர் சிலந்தி வலை உருவாக்குவது. ஆர்க் பெருந்திரளவில் தத்தெடுக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான மேடை மற்றும் வாடிக்கையளர், டெவலப்பர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் ஆன்டி-சென்ட்ரலைசேஷன் கண்ணோட்டத்தில் ஒரு நேர்மறை விஷயம் என்னவென்றால், DPoS ன் ஒருமித்த கருத்தில் ஆர்க் டோக்கன் தானாகவே இயங்குகிறது. மேலும், எந்த டெவலப்பரும் ஆர்க் மீது கட்டிடம் எழுப்பலாம், ஏன் என்றால் இது மாற்று ப்ரொக்ராமிங் மொழிகளை பயன்படுத்துகிறது. ஏற்கனவே 10+ மொழிகளுக்கு ஆதரவு உள்ளது மற்றும் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது.

ஆர்க் டெவலப்பர்கள் தங்களுடைய திட்டத்தில் வெற்றி அடைந்தால், ப்ளாக்செயின் தொழில்நுட்பம் தத்தெடுத்தல் மற்றும் தொடர்ந்து வளரக்க்கூடிய ஒரு மிகவும் வலிமை வாய்ந்த தூண்டுதலாக இந்த க்ரிப்டோ இருக்கும்.

தற்போது ஆர்க் நாணயத்தின் விலை $0.23, ஆனால் 2018 அரம்பத்தில் ஒரு நாணயத்தின் மதிப்பு $10. அடுத்த காளை கட்டம் வரும்போது, ஆர்க்கின் மதிப்பு $5 க்கும் மேலாக உயரும். இதனால், மிகப் பெரிய வருவாய் ஆற்றல் உள்ள குறைவாக மதிப்படப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக இது தற்போது தெரிகிறது.

4. ஏயான் (AION)

ஏயான் ஒரு பல அடுக்கு உள்ள ப்ளாக்செயின்டு நெட்வர்க். துறை சார்ந்த தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து மற்றும் நவீன உலகின் தேவைகளை பூர்த்தி செய்ய, தீர்வுகள் உருவாக்குவதற்கான மற்றும் பல ப்ளாக்செயின்கள் சகவாழ்வுக்கான ஒரு எதிர்கால பல அடுக்கு கொண்ட ப்ளாக்செயின்டு நெட்வர்க்.

இந்த நிறுவனத்துக்கு ஒரு நாணயமும் உள்ளது மற்றும் அதன் பெயர், ஏயான். $54 மூலதனத்துடன் க்ரிப்டோகரண்சீ துறையில் இது 104வது இடத்தில் உள்ளது. டோக்கன் பாலங்கள் பயன்படுத்தி, ப்ளாக்செயினில் சொத்துக்களை மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் லாஜிக்கை சீராக பரிமாற்றம் செய்ய ஏயான் உறுதிச்செயகிறது. பாலங்களை பராமரிக்கும் நோட்ஸ் மற்றும் வேலிடேட்டர்களுக்கு பயன்கள் மற்றும் சலுகைகள் இது அளிக்கிறது.

எதற்கு ஏயான் ஒரு குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக தோன்றுகிறது?

பல அடுக்கு கொண்ட ப்ளாக்செயின் நெட்வர்க், ஏயான், இப்போது தன் அடிவானத்தை விரித்து கொண்டு ஜப்பான், கொரியா கற்றும் சைனாவை நோக்கி செல்கிறது. இந்த வலிமையான உயர் வளர்ச்சியினால் விலையில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு உள்ளது ஆனால் வால்யூமில் கூர்மையான அதிகரிப்பு காணப்படுகிறது.

பெரும்பாலான மற்ற ப்ளாக்செயின்களில் காணாத தனிப்பிட்ட இயங்குத்தன்மையினால் ஏயான் நெட்வர்க் ஒரு வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது. மறுபுறம், ஏயானின் வேர் செயினை அந்நியப்படுத்துதலில் 24/7 செயல்படுவதால் அதன் குழு தன்னை முழு கவனத்துடன் அர்ப்பணித்துள்ளது. இதனால், ஏயான் வெறும் ப்ளாக்செயின் செயலிகளில் மட்டும் இயங்காமல் மற்ற செயலிகளிலும் இயங்கும் என்று உறுதிப்படுத்துகிறது. மேலும், இடை செயின் பாலங்களை பணமாக்குகிறது மற்றும் முழு வலைப்பின்னலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

தற்போது வெறும் $0.12 மதிப்பில் உள்ள ஏயான் ஒரு மிகவும் மலிவான க்ரிப்டோகரண்சீயாக கருதப்படுகிரது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதன் விலை $5 மற்றும் $10க்கு இடையே இருந்தது. அதன் பழைய விலையின் பாதியை ஏயான் அடைந்தாலே, ஏயான் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தான். இதன் தனித்தன்மை மற்றும் தரத்தினால், 2020ம் ஆண்டு ஏன் இது நடக்காது என்று எனக்கு தெரியவில்லை.

ஏயான் குறித்து மேலும் தகவல் அறிய மற்றும் எந்த சந்தைகளில் இதை வாங்கலாம் என்றும் தெரிந்துகொள்ள https://coinmarketcap.com/currencies/aion/ விஜயம் செய்யவும்.

5. காஸ்மாஸ் (ATOM)

காஸ்மாஸ் (ATOM) ப்ளாக்செயின்களை நம்பாமல் ஒரு பரவலாக்கப்பட்ட ஈக்கோசிஸ்டம், மற்றும் இன்டர்னெட் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறைக்கான அடைப்படையாக இருக்கப் போகிறது.

‘ஹப்’ என்று அழைக்கப்படும் மத்திய ப்ளாக்செயினுடன் இணைந்த‘ஜோன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள பல்வேறு சுதந்திரமான கட்டிடத்தை காஸ்மாஸ் அடைப்படை கொண்டது.

இதன் நாணயம், ஆட்டம், $580 மில்லியன் மூலதனத்துடன் க்ரிப்டோ உலகில் 25வது இடத்தில் உள்ளது.

ஏன் காஸ்மாஸ் ஒரு குறைவான மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக தோன்றுகிறது

ஏன் காஸ்மாஸ் ஒரு குறைவான மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக தோன்றுகிறது?

காஸ்மாஸ் பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்ட ஒரு திட்டம் மற்றும் 2017ம் ஆண்டு ஒரு சிறு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியது. அதன் பிறை, ஒரு மிகப் பெரிய ஆர்கானிக் சமூகமாக உயரத்தை தொட்டுள்ளது. அளவீடல் பிரச்னை இல்லாததால் இந்த ஆல்ட்காயின் மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.

அதனால், 2015–17 காலக்கட்டத்தில் Ethereum க்கு என்ன நிகழ்ந்ததோ, அது தற்போது காஸ்மாஸ்க்கு நிகழ்கிறது. டஜன் கணக்கில் உண்மையான, சுவாரஸ்யமான திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மிகவும் பயனுள்ள தொழில்நுட்பம் என்று தெரிந்திருப்பதால், இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐரிஸ்நெட் (IRISnet), சென்டினல் (Sentinel), அக்ரீமென்ட்ஸ் நெட்வர்க் (Agreements Network), ஃபோம் (FOAM) மற்றும் ட்ரூஸ்டோரி (TruStory) தங்களுடைய செயலிகளை ஹோஸ்ட் செய்ய காஸ்மாஸை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதன் ATH ல் காஸ்மாஸின் மதிப்பு $6.5 க்கும் மேல் இருந்தது மற்றும் தற்போது வெறும் $3.17. இந்த ப்ரோஜெக்ட் மிகவும் நன்றாக முன்னேரி கொண்டிருக்கிறது மற்றும் பல முதலீட்டாளர்கள் இதன் மதிப்பு குறைவாக இருப்பதாக கருதுகிறார்கள். அடுத்த க்ரிப்டோ காளை மார்கெட் வரும்போது காஸ்மாஸின் மதிப்பு $10 ஐ தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

6. ஹோலோ (HOT)

ஹோலோசெயின் ஒரு வினியோகிக்கப்பட்ட கணினி நெட்வர்க் மற்றும் இது ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை விட வேகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பியர் டு பியர் நெட்வர்கிங்கில் ஹோலோஸ்க்கு எல்லையற்ற ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது; அதனால், வினியோகிக்கப்பட்ட பயன்பாடுகள் சேர்க்கப்படுகிறதால், நெட்வர்கின் இயக்கத்தில் சீரழிவு இல்லை.

$104 மில்லியன் மூலதனத்துடன் இதன் நாணயன் ‘ஹாட்’ க்ரிப்டோ உலகில் 64வது இடத்தில் உள்ளது.

இந்த வலைப்பின்னலுக்கு பின்னால் இருக்கும் க்ரிப்டோ — ஹோலோசெயின், அளவிடக்கூடியது மற்றும் ஏஜென்ட் சென்ட்ரிக் வினியோகிக்கப்பட்ட கணினி மேடை ஆகும். அஜென்ட் சென்ட்ரிக் உருவப்படியத்திலிருந்து டேட்டா சென்ட்ரிக் மேடைக்கு நகர்ந்து இது இயங்குகிறது; இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணினியில் ஆப்ஸ் ஹோஸ்ட் செய்தபடியே அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

ஏன் ஹோலோ ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக தெரிகிறது

ஏன் ஹோலோ ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக தெரிகிறது?

2019ம் ஆண்டு 1461 க்கும் மேலான ஒப்பந்தங்கள் இந்த வலைப்பின்னலில் பதிவு செய்யப்பட்டது; இதன் பொருள், இந்த வலைப்பின்னல் நிறைய பணி செய்திருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் உலகில் இது ஒரு மிகவும் குறைவாக மதிக்கப்பட்ட க்ரிப்டோஸாக இருக்கிறது? ஏன் என்றால், க்ரிப்டோ துறையில் ஆய்வு செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை, அதனால் இது இன்னும் மலிவாக இருக்கிறது.

ஹோலோசெயின் க்ரீன் மேப் ஒரு நன்கு நிபன்தனை செய்யப்பட்ட மற்றும் விரிவான சாலை வரைபடம் மற்றும் பிரதான சாலைகளில் இருக்கும் நபர்களுக்கு வருமானம் உருவாக்கியபடியே ஹோஸ்ட் செய்ய மற்றும் தகவல் பகிர்ந்து கொள்ள கதவுகளை திறக்கிறது.

இந்த வலைப்பின்னலுக்கு பின்னால் துறையில் பல வருடங்கள் அனுபவம் பெற்ற நன்கு அறிந்த நபர்களின் குழு இருக்கிறது. இந்தக் காரணத்தினால், தற்போது $0.006 அக இருக்கும் இதன் மதிப்பு $0.002 மற்றும் அதற்கும் மேல் உயரும். மிகவும் பெரிய வருவாய் ஆற்றல் இங்கே இருக்கிறது.

7. ஐகான் (ICX)

ஐகான் ஒரு தொழில்நுட்ப மற்றும் வலைப்பின்னல் கட்டமைப்பு. சுதந்திரமாக இயங்கும் ப்ளாக்செயின்ஸ் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள அனுமதிக்கும்படி இது வடிவமைக்கப்பட்டது.

$181 மில்லியன் மூலதனத்துடன் இதன் நாணயம் ICX க்ரிப்டோ உலகில் 43வது இடத்தில் உள்ளது.

ஐகான் வலைப்பின்னலில் ஒவ்வொறு ICX க்கும் பங்கு உரிமை உள்ளது மற்றும் வேலிடேட்டர்களுக்கு வாக்களிக்க அல்லது உற்பத்தி செய்பவர்களை தடை செய்ய உரிமை இருக்கிறது. பரிவர்த்தனை கட்டணம் / ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் கணக்கீடு செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் தற்போது ஐகான் மலிவாக உள்ளதா? ஏன் இது ஒரு நல்ல முதலீடு?

சந்தையில் ICX அநேகமாக மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீ. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்க இங்கே வாய்ப்பு உள்ளது. இதன் கூட்டாளிகள் பிரபலமானவர்கள் மற்றும் ஒரு நாடே இதன் பின்னால் இருக்கிறது. இதன் முக்கிய வலை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் சில ICO’s இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்; எனவே இது ஒரு மோசடி இல்லை என்று நமக்கு தெரிகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐகானின் மதிப்பு வரலாறு காணாத வகையில் மிகவும் குறைவாக வீழ்ந்தது. இப்போது மீட்கப்பட்டாலும், அதன் அசல் மதிப்பை இன்னும் நெறுங்கக்கூட இல்லை. அதனால், முதலீடு செய்ய இது ஒரு மிகவும் பாதுகாப்பான நாணயம்.

நல்ல கூட்டாளிகள், சிறந்த பார்வை மற்றும் ஊக்கம் இருப்பதால், புலத்தில் மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இது அதிகம் சாதித்திருக்கிறது. இந்த நாணயம் அறிமுகமாகி வெறும் சில மாதங்கள் ஆகின்றன மற்றும் சந்தேகமின்றி டாப் 10ல் இருக்க வேண்டியது.

இந்த தகவல்களை மனதில் வைத்துக்கொண்டு, சில வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலை ஒப்பிட்டால், இதன் மதிப்பு $0.33 யிலிருந்து குறைந்தப்பட்சம் $7.50 ஆக உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

8. க்வாண்ட் (QNT)

க்வாண்டில் ஓவர்லெட்ஜர் ப்ளாக்செயின் OS மற்றும் QNT டோக்கன் அடங்கியுள்ளத; பன்மடங்கு ப்ளாக்செயின்களுக்கு இடையே இயங்குத்தன்மை உறுதிப்படுத்த மற்றும் அதிக வளைக்கத்தடன்மையுடன் உலக நெட்வர்க்ஸ் மற்றும் செயின்களுக்கு இடையே இணைப்புகள் அனுமதி செய்ய இந்த இரண்டும் உருவாக்கப்பட்டது.

$94 மில்லியன் மூலதனத்துடன் க்ரிப்டோ உலகில் QNT நாணயம் 66வது இடத்தில் உள்ளது.

ஏன் QNT குறைவாக மதிப்பிடப்பட்டது மற்றும் 2020ல் ஏன் இது ஒரு நல்ல முதலீட்டாக தோன்றுகிறது

ஏன் QNT குறைவாக மதிப்பிடப்பட்டது மற்றும் 2020ல் ஏன் இது ஒரு நல்ல முதலீட்டாக தோன்றுகிறது?

க்வாண்ட் வலைப்பின்னல் உலகளாவிய அளவு DLT இயங்குத்தன்மை பிரச்னையை தீர்த்துவைத்துள்ளது. இன்றைய தேதியில், எந்த ஒரு சிஸ்டம் மற்றும் எல்லா சிஸ்டம்ஸை இந்த அளவில் ஆல்ட்காயின் ஒன்று தான் நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவாக, DLT ப்ரூஃப்ஸ் ஆஃப் கன்செப்ட்ஸ் மற்றும் செயல்படுத்தல் அதிகரித்து வரும் நிலையில் முதலில் களத்தில் இறங்கிய பயன்கள் இதுக்கு உண்டு.

க்வாண்ட்ஸ்க்கு பதிப்புரிமை உண்டு, தனித்துவமானது மற்றும் அரவணைக்கப்பட்டது. க்வாண்ட் வலைப்பினல் மதிப்பை ஈர்க்கலாம் ஏன் என்றல் DLT ஸ்பேஸில் ஒரு அவசரமான பிரச்னையை இது தீர்த்துவைக்கிறது; அதனால் தான் இந்த வலைப்பின்னல்கள் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தனிப்பட்ட வழியில், உலகளாவிய முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பிரச்னைகளை தீர்த்துவைக்கின்றன.

ஒவ்வொறு பெரிய துறை மீது க்வாண்ட் கவனம் செலுத்தி வருகிறது (உட்பட ஆனால் வரம்பற்ற)

• சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சில்லறை செயின்ஸ்

• சுகாதாரம் இயங்குத்தன்மை

• மல்டி செயின் டிஜிட்டல் சொத்து துறை மற்றும் செல்வம் மேலாண்மை நிறுவனங்கள்

• பாரம்பரிய நிதி சந்தைகள் மற்றும் டெரிவேடிவ்ஸ்

• ஒழுங்குமுறை தொழில்நுட்பம்

• வரிவிதிப்பு மற்றும் தணிக்கை

• குற்றம் ஏஜென்சீஸ்

• சட்ட தொழில்நுட்பம்

• செயற்கை அறிவு மற்றும் யூஸர் என்டிட்டி நடத்தை பகுப்பய்வு மற்றும் இன்னும் பல …

அதனால், க்வாண்ட் முதலீட்டாளர்கள் எந்த மதிப்பில் எந்த அளவு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்? குறைந்தப்பட்சம் $7.66 யிலிருந்து $12-$15 வரை.

க்வாண்ட் குறித்து மேலும் தகவல் அறிய மற்றும் எந்த சந்தைகளில் இதை வாங்கலாம் என்றும் தெரிந்துகொள்ள https://coinmarketcap.com/currencies/quant/ விஜயம் செய்யவும்.

9. பிட்காயின் (BTC)

ஆல்ட்காயின்ஸ் எப்போதும் ஒரு சுவாரஸ்யமான முதலீடு ஆப்ஷனாக இருந்தாலும், ஒருபோதும் நாம் பிட்காயினை மறந்துவிடக் கூடாது. தற்போது விலை $10,000 யிலும் இது ஒரு மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீஸ்.

பிட்மாயின் ஒரு விதமான பரவலாக்கப்பட்ட க்ரிப்டோகரண்சீ; இதுக்கு மத்திய வங்கி அல்லது நிர்வாகி இல்லை; மற்றும் தரகர்களை அகற்றி பியர் டு பியர் பொட்காயின் வலைப்பின்னலில் ஒரு பயனாளிவிடமிருந்து இன்னொறு பயனாளிக்கு சுலபாமாக அனுப்பலாம். பிட்காயின் என்பது டிஜிட்டல் பணப்பை அல்லது ஸ்மார்ட்ஃபோன் அல்லது கணினியில் சேமிக்கப்பட்ட வெறும் ஒரு கம்ப்யூட்டர் ஃபைல்.

பிட்காயின் மிகவும் பிரசித்து பெற்ற மற்றும் வலிமையாக நிறுவப்பட்ட க்ரிப்டோகரண்சீ மற்றும் இதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரம்மாண்டமான $178,877,586,882 மூலதனத்துடன் க்ரிப்டோ உலகில் BTC முதல் இடத்தில் உள்ளது.

பிட்மாயினின் மதிப்பு இன்னும் குறைவாக தான் உள்ளதா ?

சந்தையில் பிட்மாயின் முதல் இடத்தில் உள்ள மற்றும் மூலதனத்தை பொருத்தவரை மிகவும் அதிக மதிப்பு உள்ள நீர்மை நிறை பெற்ற மற்றும் விலை உயர்ந்த க்ரிப்டோகரண்சீ. ஆனால், ஏன் இது ஒரு குறைவாக மதிப்பிடப்பட்ட இரகசியம் என்று அழைக்கப்படுகிறது? வாங்க தெரிந்து கொள்ளலாம்:

பிட்காயின் இன்னும் மலிவாக இருக்கிறது மற்றும் இதில் முதலீடு செய்ய இடம் உள்ளது; ஏன் என்றால் எப்போது ஒரு புதிய நாணயம் சந்தையில் அறிமுகமானாலும், பிட்காயினின் உள்ளார்ந்த மதிப்பு கூடுகிறது. அதனால், க்ரிப்டோ உலகில் BTC ஒரு இருப்பு கரண்சீ என்று தாராளமாக கூறலாம்.

இதுக்கு ஒரு வலிமையான வாடிக்கையாளர் அடிப்படை உள்ளது, ஏன் என்றால் மக்களுக்கு தெரிந்த ஒரே க்ரிப்டோகரண்சீ BTC. பெரும்பாலும், வணிகர்கள் நிஜமாகவே டோக்கன்ஸ் வாங்கியிருக்கிறார்கள் மற்றும் அனுபவம் பெற்று, தங்கள் இலப்பத்தை உபயோகித்து BTC வாங்கியிருக்கிறார்கள்.

கடைசியில், ஆனால் குறைவான காரணமாக இல்லாமல், பிட்காயினுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும் உள்கட்டமைப்பு உள்ளது. நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டார்களுக்கு (உதாரணம் பாரம்பரிய முதலீடு சாதனங்கள் மற்றும் கஸ்டடி தீர்வுகள்) மிகப் பெரிய அளவில் ஆதரவு அளிக்க இடம் உள்ளது. இத்துடன், வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார நெறுக்கடி நிலையினால் பிட்காயின் மதிப்பு 2020ம் ஆண்டு பிற்பாதியில் $10,000 யிலிருந்து $75,000 மற்றும் அதுக்கும் மேல் உயரலாம்.

10. போல்காடாட் (DOT)

போல்காடாட் ஒரு பன்முகத்தன்மை கொண்ட பன்மடங்கான தொழில்நுட்பம். பன்மடங்கு ப்ளாக்செயின்கள் சேர்ந்து தடையற்ற முறையில் இயங்க இது அனுமதிக்கிறது. ஆனால், இந்த பட்டியலில் போல்காடாட் ஒரு ஒற்றையான நிறுவனம் ஏன் என்றால் அதன் நாணயம், டாட், சந்தையில் இன்னும் அறிமுகம்கூட செய்யப்படவில்லை. ஆனால், நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் இப்போதே முதலீடு செய்ய தொடங்கலாம், அதாவது ஃப்யூச்சர்ஸ் என்று அழைக்கப்படும் IOUs நீங்கள் வாங்கலாம்.

ஏன் பட்டியலில் போல்காடாட் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக தெரிகிறது

ஏன் பட்டியலில் போல்காடாட் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட க்ரிப்டோகரண்சீயாக தெரிகிறது?

போல்காடாட், இயங்குத்தன்மை கொள்கையில் இயங்குகிறது, அதாவது, அதன் முக்கிய இலக்கு பன்மடங்கு ப்ளாக்செயின்கள் சேர்ந்து தடையற்ற முறையில் இயங்குவது. அறிமுகமானவுடன், அதன் இயங்குத்தன்மை அம்சத்தினால் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள்.

பல ப்ளாக்செயின்களுக்கு பாதுகாப்பு அளிக்க பொதுவான ஒரு வேலிடேட்டர்கள் அமைப்பு அனுமதிப்பதால் இது ஒப்பிடமுடியாத அளவில் பொருளாதார அளவீடலை வழங்குகிறது.

பன்மடங்கான இணையொத்த வலைப்பின்னலில் ப்ளாக்செயின் பரிவர்த்தனைகளை பரவுகிறதால், பரிவர்த்தனை அளவீடலையும் இது செயல்படுத்துகிறது.

போல்காடாட்டின் நவீன டேட்டா கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்களினால், லாஜிக்கல் முறையில் ப்ளாக்செயின்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள சாத்தியம் ஆகிறது.

மேலும், அதன் பன்முகத்தன்மை பன்மடங்கான தொழில்நுட்பத்தினால், போல்காடாட்டில் சமச்சீர் ஆளுகை முறை உள்ளது மற்றும் இதில் ஒவ்வொறு பங்குதாரர்க்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. நெட்வர்க்கின் மேம்படுத்தல்கள் ஆன் -செயினில் ஒருங்கிணைக்கப்படுறது மற்றும் தன்னாட்சி முறையில் ஒப்புதல் வழங்கப்படுகிறது; இதனால், நெட்வர்க்கின் வளர்ச்சி சமூக மதிப்புகளுடன் சீரமைகிறது மற்றும் தேக்கம் தவிர்க்கப்படுகிறது.

இந்த க்ரிப்டோ குறித்து மேலும் தகவல் அறிய மற்றும் எந்த சந்தைகளில் இதை வாங்கலாம் என்றும் தெரிந்து கொள்ள https://coinmarketcap.com/currencies/polkadot-iou/ விஜயம் செய்யவும்.

முடிவுரை

நீணட காலத்தை பார்க்கும் போது, 2020ம் ஆண்டில் இந்த க்ரிப்டோகரண்சீஸில் முதலீடு செய்வது வாழ்க்கையில் ஒரு முறை வரும் நிகழ்வு என்று நியாயமாக கூறலாம். ஆல்ட்காயின்ஸ் முதிர்ச்சி அடைந்த சொத்துகளாக வளர்ந்து வருகிறது. வலிமையான வலைப்பின்னல்கள் மற்றம் புரட்சிகரமான தொழில்நுட்பங்களுடன் சந்தையில் பல ஆல்ட்காயின்ஸ் உள்ளன. அதனால், இப்போது முதலீடு செய்து, பிறகு இலாபம் கிட்டவும்.

--

--